அரியலூர் மாவட்டத்தில் வரும் 28, 29ம் தேதி அரசு விழா முதல்வர் ஸ்டாலின் வருகை: அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 28, 29ம் தேதிகளில் பங்கேற்கும் அரசு விழாக்கள் தொடர்பாக, கொல்லாபுரம் கிராமத்தில் அமைச்சர் சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகள் மற்றும் அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் முதல்வர்  ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதையொட்டி அரியலூர் – செந்துறை சாலையில் உள்ள, கொல்லாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் இடத்தை,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி.,யுமான ஆ.ராசா  முன்னிலையில் நடந்த ஆய்வில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி,  அரியலூர் எம்.எல்.ஏ., கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., கண்ணன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் உடனிருந்தனர்.

ஆய்வின்போது, விழா நடைபெறும் மேடை, இடம், பயனாளிகளின் எண்ணிக்கை, பயனாளிகள் அமரும் இடம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி, நலத்திட்ட உதவிகள் விபரம், அரசு அலுவலர்களின் பிற பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து, அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முதல்வர் பங்கேற்கும் விழா தொடர்பான பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கியதுடன், விழா தொடர்பான பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என,  அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,  மணி, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 + = 71