அரியலூர் மாவட்டத்தில் ரூ.129 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்

 அரியலூரில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில்  முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சாலை மேம்பாட்டுப் பணிகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி,  முன்னிலை வகித்தார். அரியலூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை கி.மீ 2/0-19/2 வரை 17.20 கி.மீ உள்ள சாலையை ரூ.129 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இச்சாலை மேம்பாடு செய்யும் வழித்தடத்தில் உள்ள கொல்லாபுரம், தாமரைக்குளம், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர், இராயம்புரம் மற்றும் அகரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் கட்டப்படும். இப்பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.129 கோடி. இப்பணியானது 21 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர்  மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் உத்தரண்டி, உதவி கோட்டப்பொறியாளர் சிட்டிபாபு, உதவிப்பொறியாளர் .இளையபிரபு, வட்டாட்சியர் குமரையா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர தின கல்வெட்டை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 67 =