அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 278 மனுக்கள், பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரால் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

செந்துறை வட்டம், தளவாய் ஊராட்சியைச் சேர்ந்த பூமாலை என்பவர் சவுதி அரேபியாவில் இறந்ததைத் தொடர்ந்து பூமாலையின் மனைவி ஆனந்தி என்பவருக்கு ரூ.7,54,928 இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையினையும், ஆண்டிமடம் வட்டம், தேவனூர் பூசாரித் தெருவைச் சேர்ந்த குடியரசு என்பவர் சவுதி அரேபியாவில் இறந்ததைத் தொடர்ந்து குடியரசு மனைவி சித்ரா என்பவருக்கு ரூ.3,53,969 இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =