அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 251 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் , இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் திரு.சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 38 = 40