அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி அரியலூர் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பூர் கிராமத்தில்,  கண்ணன் என்பவரது கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அருன்மோகன் என்பவர் மீதும், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான தமிழ்ச்செல்வன், ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளந்தை பெரிய ஏரிக்கரை அருகில் சட்ட விரோதமாக  லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த சிவக்குமார் மற்றும் சின்னதுரை ஆகியோர் மீதும், செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வஞ்சினாபுரம் கிராமத்தில், பச்சை பிள்ளை கொலை வழக்கின் குற்றவாளியான அருண்குமார் உள்ளிட்ட 5 நபர்களை, குண்டர் சட்டத்தில் அடைக்க, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேற்று வெளியிட்ட உத்தரவின்படி, குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, காவல் துறையினர் குற்றவாளிகளை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.