அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற கணித ஆசிரியருக்கு பாராட்டு

நல்லாசிரியர் விருது பெற்ற சோழன் குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் சால்வை அணிவித்து பாராட்ட பெற்றார்.

அரியலூர் மாவட்டம் சோழன் குடிக் காடு அரசு உயர் நிலைப் பள்ளியில், கணித பட்டதாரி ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி வரும் சுகுணா பாண்டியன், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். அவரை பள்ளிக்கு சென்று, உலகத் திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில், அதன் நிறுவனரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான அசாவீரன் குடிக்காடு இராவணன், சால்வை அணிவித்து பாராட்டினார். பணி நிறைவு பெற்ற கூட்டுறவுச் சங்கம் செயலர் மணிவண்ணன் உடன் இருந்தார்.