அரியலூர் மாணவி: நீட் தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை!!!

சேலம் மாணவன் தற்கொலையை அடுத்து அரியலூர் மாணவியும் நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்று நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற தவறாக எண்ணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.   தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562 மதிப்பெண் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

முன்னதாக, சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை ‘நீட்’ எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − 33 =