அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

அரியலூர் கோதண்டராமசாமி கோயிலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைப்பணம் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

அரியலூர் நகரின் மையப் பகுதியில், பிரசன்ன வெங்கடேச பெருமாளை மூலவராக கொண்ட, கோதண்டராமசாமி கோயில் உள்ளது. அரியலூர் நகரில் பக்தர்கள் அதிகம் வழிபாடு நடத்தும் கோவில்களில் முதன்மையானதும், இப்பகுதியை சார்ந்த மக்கள் பலரும், தனது இல்ல திருமணத்தை நடத்துவதற்காக வந்து செல்லும் முக்கியத்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில், மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களும், 10 தூண்களில் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பல 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு, பக்தர்கள் செலுத்திய பணம் மற்றும் நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

 கடலூர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் ஜோதி உத்தரவுப்படி, அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் செயல் அலுவலர் சரவணன் மேற்பார்வையில், கோயில் தக்கார், பணியாளர்கள், மற்றும் மக்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =