அரியலூர் ஐந்தாவது நாள் புத்தகத் திருவிழாவில் கலியபெருமாள் கோவில் தர்மகர்த்தா பங்கேற்பு

அரியலூர் ஜூன்.30-

அரியலூரில் நடைபெறும் ஐந்தாவது நாள் புத்தகத் திருவிழாவில், கலிய பெருமாள் கோயில் தர்மகர்த்தா வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளித் திடலில், கடந்த 24 ஆம் தேதி துவங்கி, ஜூலை 4-ஆம் தேதி வரை, 6-வது அரியலூர் புத்தக திருவிழா நடைபெறுகிறது. ஐந்தாவது நாள் புத்தகத் திருவிழாவுக்கு, அரியலூர் தொழிலதிபர் கதிர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தர்மகர்த்தா வெங்கடாஜலபதி பங்கேற்று சிறப்பித்தார். மேலும் பெருகவாழ்ந்தான் சந்தோஷ் குமார் சிறப்புரையாற்றிய இந்நிகழ்ச்சியில், அரியலூர் கேகே நகரை சேர்ந்த புஷ்பாஞ்சலி குழுவினரின், வீணை இசை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சகானா காமராஜ் வரவேற்றுப் பேசிய இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர் கோகுல் பாபு நன்றி கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 87