அரியலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்

அரியலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் அதன் தலைவர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் சரஸ்வதி ஜெயவேல் வரவேற்றார். கணக்காளர் ராஜீவ் காந்தி தீர்மானங்களை படித்தார்.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டிப்பட்டாக்காடு முதல் கோவிலூர் வரையிலான 1.20 கிலோமீட்டர் சாலை, ஆண்டி பட்டாக்காடு முதல் சின்ன பட்டாக்காடு வரையிலான ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை, சுண்டக்குடி வல்லக்குளம் காமராசவல்லி வரையிலான 4.20 கிலோமீட்டர் சாலை உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் திட்டத்திடம் ஒப்படைப்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இக்கூட்டத்தில், அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ஆனந்தன், அலுவலர்கள் கண்ணன், பவுன்ராஜ், வசந்தன், தமிழ்ச்செல்வி, யோபுராஜா, முருகானந்தம், நெடுஞ்சேரலாதன், ஞான

மரியசெல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, முத்துசாமி, சரவணன், முருகேசன், ராணி, கண்ணகி, செந்தமிழ்ச்செல்வி, சுந்தரவடிவேல், ரேவதி, மாலா, வைப்பம் சிவபெருமாள், ராதாகிருஷ்ணவேணி, விஜயகுமார், சுரேஷ்குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 71 = 76