அரியலூர் அருகே 8 வயது சிறுமி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது

அரியலூர் அருகே தோட்டத்தில் பழம் பறிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (60). இந்த முதியவர் தனது தோட்டத்தில் வளர்க்கும் இலந்தப்பழம் மரத்தில் இருந்து பழங்களை பறிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் – சிறுமிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 6 வயது சிறுமிகள் இருவர் இலந்தை பழம் பறிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது இளங்கோவன் 8 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததை பார்த்த சிறுமியின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி கூறியதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 − 46 =