அரியலூர் அருகே வி.கைகாட்டியில் அரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோ கிராபர்ஸ் நலச்சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் அருகே, வி.கைகாட்டியில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, அரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோ கிராஃபர்ஸ் நலச்சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு, அதன் மாவட்டத் தலைவர் எஸ். மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணன் வரவேற்று பேசினார், மாவட்டப் பொருளாளர் ஆர். கொளஞ்சி, கண்டிராதித்தம் சிவா, பாஸ்கர், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
17.02 .2022 முதல் 29.04 .2023 வரையிலான, சங்கத்தின் வரவு செலவு கணக்கு அறிக்கையை, பொருளாளர் ஆர். கொளஞ்சி தாக்கல் செய்து பேசினார். சங்கம் சார்பில், ஆண்டிமடத்தில் 183 வது உலகப் புகைப்பட தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது, சோனா ஸ்டுடியோ ஜெகதீசன், அரியலூர் மாவட்ட சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக, முதன் முதலாக தனது சார்பில் நிதி கொடுத்து ஊக்கப்படுத்தியது உட்பட, 14 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன, சங்க உறுப்பினர்களின் வாத, பிரதிவாதங்களும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோ கிராபர்ஸ் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் ஆர். கர்ணன், துணைத் தலைவர்கள் எம். கனகசபை, பி. வெங்கடேசன், துணை செயலாளர் எஸ். ராதாகிருஷ்ணன், மற்றும் சங்க உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.