அரியலூர் அருகே கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு

அரியலூர் அருகே கீழப்பழுவூரில், மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி உருவச்சலைக்கு, பல்வேறு அரசியல் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், 1965 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள், அரியலூர் அருகே கீழப்பழுவூரை சேர்ந்த, சின்னசாமி என்பவர், திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க எனக் கூறி, தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் கீழப்பழுவூர் மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் நினைவை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி, மொழிப்போர் தியாகிகளுக்கான நினைவு நாளாக, வீரவணக்க நாள் என திராவிட இயக்க கட்சிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி அரியலூர் அருகே, கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள, மொழிப்போர் தியாகி சின்னச்சாமியின் உருவ சிலைக்கு,  நேற்று காலை முதன்முதலாக, நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் தலைமையில், மாவட்ட தலைவர் சுதாகர், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் நீல மகாலிங்கம் உள்ளிட்டோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து, திமுக அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் .எஸ். சிவசங்கர் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள், கீழப்பழுவூரில் உள்ள சின்னச்சாமி உருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திமுக கீழப்பழுவூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பாளை அமரமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கீதா ஜெயவேல், ஒன்றிய செயலாளர்கள் அசோக சக்கரவர்த்தி, கென்னடி, அன்பழகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆசை அன்பு, மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட அவைத்தலைவர் சிவ மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் கீழப்பழுவூரில் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ஆ.இளவரசன், ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், கட்சி நிர்வாகிகள் ஓபி சங்கர்  ஏபி செந்தில், பொய்யூர் பாலசுப்ரமணியன், திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன், நகர செயலாளர் மருதமுத்து உள்பட ஏராளமானோர்  பங்கேற்றனர்.


செங்குந்தர் மகாஜன சங்கத்தின் அரியலூர் மாவட்ட கிளை சார்பில், கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி சின்னச்சாமி உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் செல்வம், செங்குந்தபுரம் புனிதம், அரியலூர் புலவர் இளங்கோ, பழனியாண்டி ஆசிரியர், கீழப்பழுவூர்  மருதமுத்து, ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழர் நீதி கட்சி சார்பில் அதன் தலைவர் சுபா இளவரசன், கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி சின்னச்சாமி உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மதி, அறிவுமழை, சிவக்குமார், சித்த மருத்துவர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான துரை மணிவேல், மொழிப்போர் தியாகி சின்னசாமி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பருக்கல் புகழேந்தி, திருமானூர் வடிவேல் முருகன், விக்கிரமங்கலம் முனியமுத்து, வீரபோகம் கோகுல் எஸ்.ஆர்.கே.கோவிந்தராஜ், ஆப்டிகல் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கீழப்பழுவூர் தர்ம பிரகாஷ், மொழிப்போர் தியாகி சின்னசாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செம்மலை, திருமானூர் ரவிசங்கர், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில், அக்கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பலரும் ஊர்வலமாக வந்து, மொழிப்போர் தியாகி சின்னச்சாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில், கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன் ஊர்வலமாக வந்து, மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உட்கோட்டை தண்டபாணி, அரியலூர் லோகுராஜ், ஜெம் கண்ணன், பாலமுருகன், நகர செயலாளர் உத்தாண்டம் கார்த்திக், கீழக்குளத்தூர் மோகன், அழகு பாண்டியன், புகழேந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையில், கட்சி நிர்வாகிகள் அன்பானந்தம், கதிர் வளவன், சுதாகர், தனக்கோடி உள்பட ஏராளமானோர், மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =