அரியலூர் அருகே, கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் அருகே, கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பெருந்திருவிழா, ஆண்டுதோறும் ஸ்ரீராம நவமி நாளன்று தொடங்கி, 10 நாட்கள் நடைபெறும். அதன்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை கலியுக வரதராஜ பெருமாள் கோயில் பெருந்திருவிழா நடைபெறுகிறது. அதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளி இருந்தார்.
கோயிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராமச்சந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி, வரதராஜன் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், கோவில் பட்டாச்சாரியார்கள் ஆகம பூஜைகளுடன் பெருந்திருவிழாவுக்கான கொடியேற்றம் செய்தனர்.
மங்கல வாத்தியங்கள் முழங்க, பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற, இக்கொடியேற்று விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தனர்.