கயர்லாபாத் கிராமத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், தஞ்சாவூர் அணி கோப்பையை வென்றது.
அரியலூர் அருகே, கயர்லாபாத் கிராமத்தில், களம் கண்ட வேங்கை கபடி குழுவை சேர்ந்த அஜித் குமார், கண்ணன், தனுஷ், சேகர் உள்ளிட்டோர் முன் நின்று நடத்திய, கபடி போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன.
இக்கபடி போட்டியில், முதல் பரிசுக்கான கோப்பையை, தஞ்சாவூர் ராஜேஷ் கபடி குழுவினரும், இரண்டாவது பரிசை கோவிலூர் ஐ.கே.பி கபடி குழுவினரும், மூன்றாவது பரிசை கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த களம் கண்ட வேங்கை கபடி குழுவினரும் பெற்றனர். மேலும் பருக்கல் கிராமத்தை சேர்ந்த வீர தமிழன் கபடி குழு, ஏலாக்குறிச்சி அம்பேத்கர் பிரதர்ஸ் கபடி குழுவினருக்கு, ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற, ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, அதிமுக பிரமுகர் வேலுசாமி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு கோப்பைகளை வழங்கினர்.