அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா: எம்.எல்.ஏ சின்னப்பா பங்கேற்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா கலந்து கொண்டு, 155 மாணவ மாணவியருக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரன், திருமானூர் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி அசோக சக்கரவர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கீதா ஜெயவேல், ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மீனாம்பிகா சிவானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் திரிசங்கு, மதிமுக ஒன்றிய செயலாளர் பி. சங்கர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 + = 70