அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, தா.பழூர், அரியலூர், திருமானூர் உள்பட ஆறு வட்டாரங்களிலும் வட்டார அளவில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பொது அறிவு வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
இந்த ஆறு வட்டாரங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மாணவ மாணவிகளை கொண்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் நோக்கம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி விளக்கி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
வினாடி வினா போட்டிகளில் நடுவர்களாக செங்குட்டுவன், அன்பு, படைகாத்து உள்ளிட்ட ஆசிரியர்கள் பணியாற்றினர்.