அரியலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், கீழப்பழுவூரில் உள்ள அரியலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய, இந்திய ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை பணிகளுக்கான தொழில் நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஜோதிநாதன் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம், கப்பல் படை, மற்றும் விமானப்படைகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து, முன்னாள் படைவீரர் நல அலுவலர் சடையன் சிறப்புரையாற்றினார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் எடுத்துரைத்தார். அரியலூர் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார், தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.
மத்திய மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்தும்,
அத்தேர்வினை எவ்வாறு எதிர்கொள்ளது என்பது குறித்தும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிமாறன் விளக்கி பேசினார்.
நிறைவாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவியாளர் ராஜா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Home அறிவியல் & தொழில்நுட்பம் அரியலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி