அரியலூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், 15வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
அரியலூர் அருகே காத்தான்குடிக்காடு கிராமத்தில் உள்ள, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, 15 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவுக்கு, கல்லூரி டீன் டாக்டர் பி. செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து ஆண்டறிக்கை படித்தார். டாக்டர் வி. வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
அரசு அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உள்பட 400 பேருக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி முதன்மை விருந்தினர், டாக்டர் எம். குமரவேல் சிறப்புரையாற்றினார்.
பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற விழாவில், உதவி பேராசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். முடிவில் டாக்டர் மார்க்கபந்து நன்றி கூறினார்.