அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனித கழிவு கலந்த, சாதி வெறி கும்பலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவர் பெ. மு.செல்வ நம்பி தலைமை வகித்தார், மணக்கால் பூமிநாதன் வரவேற்றார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமார்பன் கண்டன உரையாற்றிய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அன்பானந்தம், தனக்கோடி, மதி என்ற மருதவாணன், ஜெயங்கொண்டம் கதிர் வளவன், இலக்கிய தாசன், சிவக்குமார், செந்துறை கடம்பன், தனக்கோடி, கருப்புசாமி, செய்தி தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் செல்வகுமார் நன்றி கூறினார்.