அரியலூரில் வட்டார அளவில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற தடகள போட்டிகள்

அரியலூரில் வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் உட்பட அரியலூர் வட்டார அளவிலான 30 பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற ஓட்டப் பந்தயம்,  நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல்,  குண்டு எரிதல், வட்டியடிகள்,  தடை தாண்டும்,  ஓட்டம் ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார், அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார், விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
மேல்நிலைப் பள்ளிகளின் நேர்முக உதவியாளர் ராஜப்பிரியன், அரியலூர் வட்டார அளவிலான பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,
போட்டிகளின் முடிவில் விளாங்குடி உடற்கல்வி ஆசிரியர் வீரபாண்டியன் நன்றி கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 − = 42