அரியலூரில் மே 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  பெ.ரமண சரஸ்வதி தகவல்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மே 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.05.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில்,  மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனோ காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  பெ.ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 + = 88