அரியலூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் சார்பில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அரியலூர் கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு, அதிமுக அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் ஊர்வலம் நடத்தி, கட்சி நிர்வாகி தாமரைக்குளம் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வைப்பம் சிவபெருமாள், சுந்தரவடிவேல், கடுகூர் முருகேசன், தளபதி கணேசன், வழக்கறிஞர்கள் ராமகோவிந்தராஜன், சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் செங்கமலை, மாவட்ட அணி தலைவர் ஓட்ட கோவில் சிவசங்கர் கட்சி நிர்வாகிகள் பழனியாண்டி, கருணாநிதி, கருப்பையா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அக்கட்சியின் நகர செயலாளர் வழக்கறிஞர் கமலக்கண்ணன், கட்சி நிர்வாகிகளுடன் வந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் ராஜ்குமார், அரியலூர் ஒன்றிய செயலாளர்கள் கனகசபாபதி, பழனிசாமி, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ஆப்டிகல் ரவிச்சந்திரன், இளைஞரணி நிர்வாகி விஜயகுமார், பேரவை மாவட்ட துணைத்தலைவர் தங்கம் கோபிநாத், ராஜேந்திரன், சக்கரபாணி, மருதாம்பாள், நகர நிர்வாகிகள் ஹரிஹரன், சின்னத்தம்பி, கார்த்திக், அருண்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், அக்கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன், அரியலூரில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர செயலாளர் உத்தாண்டம் கார்த்திக், மாவட்ட அணி நிர்வாகி லோகு ராஜ், ஜெம் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சுண்டக்குடி சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.