அரியலூரில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா

அரியலூரில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க, புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
அரியலூர் காமராஜர் திடலில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புகைப்படக் கண்காட்சி விழா நடைபெறும் 30.01.2023 வரை தினமும் மாலை 5.00 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், பெரியவர் முதல் சிறியவர் வரை பொழுதுபோக்குவதற்கான பொழுதுபோக்கு அம்சங்களும், பாரம்பரிய உணவு வகைகள் அடங்கிய உணவு கடைகளும் அமைக்கப்படவுள்ளது.

புகைப்பட கண்காட்சி துவக்க விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.ஈஸ்வரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணன், நகராட்சி ஆணையர் தமயந்தி, உதவி சுற்றுலா அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 4