அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்ட மன்றத்தில் நடைபெற்ற சாதாரண மற்றும் சிறப்பு கூட்டத்திற்கு அதன் தலைவர் பொ.சந்திரசேகர் தலைமை வகித்தார், மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு ஆறுமுகம், தனி அலுவலர் முகிலன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், உதவியாளர் சிவக்குமார் தீர்மானங்களை படித்தார், மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, நிலை குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியலை அங்கீகரித்தல் மற்றும் பல்வேறு நிர்வாக செலவினங்கள் உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலா தேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனலட்சுமி, கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முடிவில் அரியலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.