அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர், அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்திய கொலை வெறி தாண்டவத்தை கண்டித்து, அரியலூரில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, எல்ஐசி கிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகி சிற்றம்பலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் அம்பிகா, சந்தானம், கந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.