
அரியலூரில் மாபெரும் தமிழ் கனவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழக அரசின் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை சார்பில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் நடைபெற்ற, மாபெரும் தமிழ் கனவு என்கிற கருத்தரங்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை வரவேற்றுப் பேசினார்.
அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகள், தத்தனூர் ராமசாமி கலை அறிவியல் கல்லூரி, கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரி, கருப்பூர் விநாயகா மகளிர் கல்லூரி உட்பட, மாவட்ட அளவில் பல்வேறு கலை, அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும், சுமார் 800 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற இக்கருத்தரங்கில், மதுரையைச் சேர்ந்த நர்த்தகி நடராஜன் சிறப்புரையாற்றினார், மேலும் மாணவ, மாணவிகளின் வினாக்களுக்கும் பதில் அளித்தார், சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கான, சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா மற்றும் நர்த்தகி நடராஜன் உள்ளிட்டோர் வழங்கினர்.
அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், குமரய்யா, வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், ஆர்.ஐ முருகன், தமிழ்ச்செல்வன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.