அரியலூரில் மத்திய தகவல் தொடர்பகம் சார்பில் புகைப்பட டிஜிட்டல் கண்காட்சி

அரியலூரில் மத்திய தகவல் தொடர்பகம் சார்பில், புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி  தொடக்க விழா நடைபெற்றது.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்க வளாகத்தில், மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், தொடர்ந்து மூன்று நாட்கள் செயல்படுத்தப்படும், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள்,  புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி நடைபெறுகிறது.

இதற்கான தொடக்க விழா, சென்னையில் உள்ள மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்று பேசினார். புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை தொடக்கி வைத்து, இக்கண்காட்சி தொடர்பாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில், அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளி பிரபு, அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், அரியலூர் மாவட்ட நலப்பணிகள் துறை அலுவலர் குமார், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர அலுவலர் அருண்குமார் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.முடிவில் கள விளம்பர உதவியாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 3 =