அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள், தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின், அரியலூர் மாவட்ட கிளை சார்பில்,  அரியலூர் கோட்ட அலுவலகம் முன்பு  நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. காமராஜ் தலைமை வகித்தார்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.
சாலை பராமரிப்புக்கென காலியாக உள்ள, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களை சாலை பணியாளர்களாக பணி வழங்கி வாழ வைக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி, நிரந்தர பயணப்படி, சீருடைப்படி, சலவை படி உள்ளிட்டவை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை பணியாளர்கள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நடத்திய, இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் கோரிக்கை விளக்க உரை பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் மாவட்ட செயலாளர் காந்தி மாநில செயற்குழு உறுப்பினர் அம்பேத்கர் உள்ளிட்டோர் பேசினர்,
தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மூர்த்தி நன்றி கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − = 26