அரியலூரில் நாளை மறுதினம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும்பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தற்போது வரும் 25ம்தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே, இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 35 வரையிலான ஐ.டி.ஐ.,  டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

மேலும், விவரங்களுக்கு 04329 – 228641 என்ற தொலைபேசி எண்ணையும் அல்லது ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 70