அரியலூரில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற, மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு, அதன் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கபிலன் வரவேற்றார். புள்ளியியல் துறை அலுவலர் முகிலன் தீர்மானங்களை வாசித்தார்.
15வது மத்திய நிதி குழு மானிய நிதியிலிருந்து, 2022 -2023 ஆண்டுக்கு, ரூபாய் 2 கோடியே 66 லட்சம் மதிப்புக்கு மாவட்ட அளவில் வளர்ச்சிப் பணிகளை தேர்வு செய்வது, மாநில  நிதிக்குழு மானிய நிதியிலிருந்து 2022- 2023 ஆம் ஆண்டிற்கு, ரூபாய் ஒரு கோடியே 64 லட்சம் மதிப்புக்கு, மாவட்ட அளவில் வளர்ச்சிப் பணிகளை தேர்வு செய்வது மற்றும், பல்வேறு நிர்வாக செலவினங்கள் உட்பட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, ஷகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தமிழ்ச்செல்வி, கீதா மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி குழு செயலாளர் கபிலன் நன்றி கூறினார். 

Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 3 =