அரியலூரில் நடைபெற்ற சாலை பணியாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சாலை பணியாளர்கள் சங்க, கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின், அரியலூர் மாவட்ட மையம் சார்பில் நடைபெற்ற, கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை வைத்தார், மாவட்ட இணை செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார்.

வெள்ளை நிற கொடியேந்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி  அரசு ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களில் தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ரூ.20,200  ஊதியம் வழங்க வேண்டும்,  சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு  கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் கருத்துரை வழங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட செயலாளர் பழனிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் துரைவேந்தன், உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசிய கண்டன ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஞானசம்பந்தன், மூர்த்தி, உதயசூரியன், வேல்முருகன், முருகானந்தம், ராஜகோபால், தர்மலிங்கம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அரிச்சந்திரன் நன்றி  கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

33 + = 39