அரியலூர் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் நகராட்சி கூட்ட மன்றத்தில் நடைபெற்ற, நகராட்சி கவுன்சிலர்களின் அவசர கூட்டத்திற்கு, நகராட்சித் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார், ஆணையர் பொறுப்பு தமயந்தி முன்னிலை வகித்தார், இளநிலை உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்களை படித்தார்.
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்காக, 25 லட்ச ரூபாய் மதிப்பில் சமையல் கூடம் கட்டுவது. அரியலூர் நகராட்சிக்கு, 7.80 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதை முன்னிட்டு, தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ள, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இடத்துக்கு, மாத வாடகையாக 49,000 ரூபாய் வழங்குவது.
அரியலூர் நகராட்சிக்கு அமைக்கப்பட உள்ள தற்காலிக பேருந்து நிலைய வளாகத்தில், பயணிகளுக்கான தற்காலிக நிழல் குடை, அதன் தெற்கு பகுதியில் ரூபாய் 6.20 லட்சம் செலவில் பொது நிதியிலிருந்து கட்டுவது, தற்காலிக பேருந்து நிலையத்திற்கான கழிவறை, ரூபாய் 6.40 லட்சம் மதிப்பில் கட்டுவது. தற்காலிக பேருந்து நிலைய வளாகத்தில் ரூபாய் 6.40 லட்சம் மதிப்பில் கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்துவது, ரூபாய் பத்து லட்சம் செலவில் மின்விளக்கு வசதி ஏற்படுத்துவது. ரூபாய் 1.40 லட்சம் மதிப்பில், தற்காலிக பேருந்து நிலைய வளாகத்தில் கிராவல் மண் கொட்டுவது உள்பட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், அரியலூர் நகராட்சி மேலாளர் சரஸ்வதி, நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி, மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.