அரியலூரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மே தின பேரணி பொதுக்கூட்டம்

அரியலூரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே, ஏஐடியுசி உள்ளிட்ட, அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்துக்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் தலைவர் ஆர். மகேந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி வரவேற்று பேசினார். சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராஜ், சிஐடியு மாநில செயலாளர் ஜீவானந்தம், உள்ளிட்டோர் சிறப்புரையாற்றிய இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் விஜயகுமார்  ஹெச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் ராமசாமி, மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் சிஐடியு கிருஷ்ணன், ஏஐடியூசி மாரியப்பன், தனசிங்கு  உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினார்கள். முன்னதாக அரியலூர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து, தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புறப்பட்ட மே தின பேரணி, பொதுக்கூட்ட திடலை வந்தடைந்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 12