அரியலூரில் தொமுச சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

அரியலூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் டாஸ்மாக் பிரிவு சார்பில் அரியலூர் பொன்னுசாமி அரண்மனை தெருவில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மின்வாரிய பிரிவு சார்பில் அரியலூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டதுடன், கல்லூரி சாலையில் உள்ள சாந்தம் முதியோர் இல்லத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு அரிசி, மளிகை உள்பட ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளின் போது, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட கவுன்சிலர் மகேந்திரன், டிரான்ஸ்போர்ட் பிரிவு நிர்வாகிகள் கனகராஜ், அப்பண்ண ராஜா, செந்தில்குமார், சாமிநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் கொளஞ்சிநாதன், பிரபாகரன், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மின்வாரிய பிரிவு மாவட்ட கவுன்சில் தலைவர் மணக்குடி மதி, கோட்ட செயலாளர் சங்கர், தலைவர் ராஜேந்திரன், திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 − 45 =