
அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் அறிவிப்பை ஏற்று, அரியலூர் வட்டாரக் கிளை சார்பில், அரியலூர் வட்டார கல்வி அலுவலகம் அமைத்துள்ள, பல்துறை அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் வட்டாரத் தலைவர் அருள் ஜோதி மற்றும் தா.பழூர் வட்டாரத் தலைவர் கருப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில், அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் மற்றும், வட்டார செயலாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை, பி எட் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்தும், கல்வித்துறையின் குறைபாடுகளையும், தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அருமை கண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் எழில் ஆர்ப்பாட்டப் பேருரை ஆற்றினார். தா.பழூர் வட்டார செயலாளர் அன்பு கோரிக்கை முழக்கம் எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில், அரியலூர் வட்டார கிளையின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், மகளிர் வலை அமைப்பு பொறுப்பாளர்கள், மற்றும் சங்கத்தின் ஆசிரிய பெருமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டாரப் பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.