அரியலூரில் தேமுதிக 18- ம் ஆண்டு துவக்க விழா

அரியலூரில் தேமுதிக பதினெட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தேமுதிகவின் 18ஆம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் தலைமையில், தேமுதிக கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து அரியலூர் கல்லூரி சாலை, இருசு குட்டை, காலேஜ் ரோடு  அருகில்,  தேமுதிக கொடியினை ஏற்றி வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் இலவசமாக வழங்கினார், பின்னர்  பேருந்து நிலையம்  பிள்ளையார் கோயில் அருகிலும், சிந்தாமணி தெரு  வன்னாங்குட்டை அருகிலும், கட்சியின் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி 50 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் நகர  செயலாளர் தாமஸ் ஏசுதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், நகர அவைத் தலைவர் மதி, நகர துணை செயலாளர் மோனிஷா ரமேஷ், நகர துணைச் செயலாளர் ரமேஷ்   மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், ஒன்றிய துணை செயலாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட தொழிற்சங்க துணை செயலாளர் ரமேஷ் அஜித்,நகர மாணவரணி முன்னாள் கேப்டன் மன்ற செயலாளர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

92 − = 88