அரியலூரில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற, மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்துக்கு, திமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் வின்சென்ட் ராஜா, பாலமூர்த்தி, விநாயகமூர்த்தி, சுரேஷ், ராஜசேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தலைமை நிலைய பேச்சாளர் மொழிமாறன், மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாளை அமரமூர்த்தி முன்னாள் ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் சிவ. மாணிக்கம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சந்திரசேகர், லதா பாலு, திமுக அரியலூர் நகரச் செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, செல்வராஜ், அறிவழகன் அசோக சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன், அன்பழகன், எழில் மாறன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, சுமதி கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கீதா ஜெயவேல், அரியலூர் நகராட்சி தலைவி சாந்தி கலைவாணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜா மற்றும் திமுகவின் பல்வேறு அணி நிர்வாகிகள், நகர, கிளை திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் அரியலூர் நகர மாணவரணி அமைப்பாளர் சுர்ஜித் நன்றி கூறினார்.