அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், முப்பெரும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டாரக் கிளை சார்பில், அரியலூர் கருணாஸ் ஹோட்டலில் நடைபெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, பொதுச் செயலாளருக்கு பாராட்டு விழா, உலக தமிழாசிரியர் பேரவை பொதுச் செயலாளர் தேர்வு உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு, சங்கத்தின் அரியலூர் வட்டாரத் தலைவர் அருள்ஜோதி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ஆ.சண்முகம் வரவேற்று பேசினார். சிவபாக்கியம், அம்சவல்லி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெறும் சங்க ஆசிரியர் அசோகன், மங்கையர்க்கரசி, சுடர்மணி, கிராஸ் மேரி மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ந. ரங்கராஜன் சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் எழில், மாநிலத் துணைச் செயலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வட்டாரத் தலைவர்கள் அருமைக் கண்ணு, சிவமூர்த்தி, வேல்மணி, ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற முன்னாள் பொறுப்பாளர்கள் விக்டர், முருகேசன், குடியரசன், ராமராஜ் மீனாட்சி உள்ளிட்டோர் பேசினார்கள்.
சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டாரப் பொறுப்பாளர்கள், வட்டார செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் பங்கேற்ற விழா முடிவில், வட்டார பொருளாளர் தஸ்தகீர் நன்றி கூறினார்.