அரியலூரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், மாநில உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் வெங்கடேஸ்வரா ஹோட்டல் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில உயர்நிலை கூட்டத்திற்கு, மாநில தலைவர் இரா. சண்முகராஜன் தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட தலைவர் வேதாந்த தேசிக இராமானுஜம் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தண்டபாணி, துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் உள்பட, பல்வேறு நிகழ்வுகள் பற்றி விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் சிறப்புரையாற்றினார்.
அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ரங்கராஜ், பொருளாளர் கோபி மற்றும் மாநில, நிர்வாகிகள், மாவட்டங்களின் நிர்வாகிகள், உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் ஆர் .சி .எஸ். குமார் நன்றி கூறினார்.