அரியலூரில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொமுச நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன், தொமுச நிர்வாகிகளின் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் பல்துறை அலுவலக வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அலுவலகம் முன்பு,  தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் நடைபெற்ற, கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் அரியலூர் மண்டல தலைவர் எஸ். நாராயணன் தலைமை வகித்தார், மண்டல செயலாளர் பி .அய்யாதுரை வரவேற்றுப் பேசினார்.

கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளர்களாக நியமனம் செய்வதை, தமிழக அரசும் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாகமும், திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்க கூடாது. டிபிசிகளில் மூவ்மெண்ட் செய்யாது, இழப்பை ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். ஒப்பந்தம் மூலம் சுமை தூக்குவோரை நியமிப்பதை, உடனடியாக நிறுத்திட வேண்டும். காலி பணியிடங்களை, 12(3) ஒப்பந்தப்படி நிரப்பிட வேண்டும். சுமை தூக்குவோருக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்தல் வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர்கள் சசிகுமார், பாலன், முனியமுத்து, பழனியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், 13-ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஒரு வார காலம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தொமுச மண்டலத் தலைவர் எஸ்.நாராயணன் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 13 =