அரியலூரில் சிஐடியூ கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் எல் .ஐ .சி. கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரியத்தில் பதிவு பெற்றவர்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கிடவும், மழைகால வேலையில்லாத நாட்களுக்கு 2000 ரூபாய் வழங்கிடவும், வாரிய பணபயன்களை உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஇந்த ஆர்பாட்ட்டம் நடைபெற்றது,,
இந்நிகழ்வில் துணை தலைவர் சந்தானம், மாநிலக்குழு தனம், மாவட்ட நிர்வாகிகள் ஆதிலெட்சுமி, செல்வராஜ், பழனிவேல், கொளஞ்சி, முத்துசெல்வி, நீலாம்பாள் மற்றும் மாதர் சங்க தலைவர்கள் பாக்கியம்,மலர்கொடி உள்ளிட்ட ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2