
அரியலூரில் சிஐடியு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமானம் தொடர்பாக 35, 36, 37- வது வாரிய கூட்ட பரிந்துரைகளை அமலாக்கி, அரசாணை வெளியிட வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள, தொழிலாளர் நல வாரியம் முன்பு, சி ஐ டி யு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின், அரியலூர் மாவட்ட கிளை சார்பில் நடைபெற்ற கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு, சி ஐ டி யு அரியலூர் மாவட்ட செயலாளர் பி துரைசாமி தலைமை வகித்தார்.
சி ஐ டி யு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் சிற்றம்பலம், சந்தானம், மாவட்டத் துணைச் செயலாளர் தர்மராஜ், உள்ளிட்டோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சி ஐ டி யு நிர்வாகிகள் தனம், சேப்பெருமாள், ஆரோக்கியநாதன், மெய்யப்பன், பன்னீர்செல்வம், முத்துச்செல்வி, சொக்கலிங்கம், ராமகிருஷ்ணன், சன்மனஸ்வரி, அமுலு, ஆறுமுகம், சின்னதுரை, சரவணவேல், சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.