தமிழக கவர்னரை கண்டித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது பற்றி காங்கிரஸ் கட்சியின் அரியலூர் நகரத் தலைவர் மாமு சிவக்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
அரியலூர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவுப்படி, தமிழக ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூரில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார், நகர காங்கிரஸ் தலைவர் மாமு.சிவகுமார் வரவேற்புரை ஆற்றினார், முன்னாள் மாவட்ட தலைவர் சீனி பாலகிருஷ்ணன், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன், திருநாவுக்கரசு, அழகானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜசேகரன் முத்துசாமி, எஸ்.எம் சந்திரசேகர், சுண்டக்குடி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிறைவாக வட்டாரத் தலைவர் கங்காதுரை நன்றி உரை ஆற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகழ்ராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி மாரியம்மாள், எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், சகுந்தலா, பூண்டி சந்தானம், ஏபிஎஸ் பழனிச்சாமி, பிரஸ் செந்தில், ராகவன், கலைச்செல்வன், சண்முகம், ஒரத்தூர் செல்வராஜ் ரவிச்சந்திரன் சுப்பராயபுரம் ராஜேந்திரன் செல்வராஜ், திருமானூர் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.