அரியலூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா

அரியலூர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சிக்குட்பட்ட, அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண  மண்டபத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்  க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தகுதி உள்ள பெண் பயனாளிக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை  தொகை வழங்கும் திட்டத்தினை,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் அபிநயா இளையராஜன்,  முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.