அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது பற்றி அரியலூர் மாவட்ட சிஐடியு கட்டுமான தொழிலாளர் நல சங்க மாவட்ட செயலாளர் துரைசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியத்தை நிறுத்திவிட்டு தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த கேட்டும், கடந்த ஆட்சியில் வழங்கியது போல பொங்கல் தொகுப்பு வழங்கிடவும், பென்சன் ரூ.3000 மாக உயர்த்தி வழங்கிட கேட்டும், அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சிஐடியு சார்பில், மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சந்தானம், மாவட்டத் தலைவர் சேப்பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் தனம், மாவட்ட நிர்வாகிகள் மெய்யப்பன், ஆதிலெட்சுமி, உள்ளிட்ட ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.