அரியலூரில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
அரியலூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்திற்கு, அதன் தலைவர் செந்தமிழ் செல்வி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ஸ்ரீதேவி, ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ஜெயவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், கிளர்க் ராஜீவ் காந்தி தீர்மானங்களை படித்தார்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு நிர்வாக செலவினங்கள் உட்பட, 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இக்கூட்டத்தில், அலுவலக மேலாளர் ஆனந்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகாயம், முரளி, தமிழ் ஒளி, ஒன்றிய பொறியாளர் வசந்தன், ஒன்றிய கவுன்சிலர் வைப்பம் கோ. சிவபெருமாள், சுந்தரவடிவேல், கடுகூர் முருகேசன், வெள்ளைச்சாமி, மாலா சாமிநாதன், ராதா கிருஷ்ணவேணி பாலு, பாப்பாள், ராணி, ரேவதி, மற்றும் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்