அரியலூரில் ஐசர் நிறுவன டிராக்டர்கள், சலுகை விலையில் விற்பனை செய்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, அரியலூர் -ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள, ஸ்ரீ வாரிஸ் ஃபார்ம் எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், விவசாயிகளுக்கு ஐசர் நிறுவனத்தின் டிராக்டர்கள் சலுகை விலையில் விற்பனை செய்வதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
8 லட்சத்து 1000 ரூபாய் மதிப்புள்ள ஐசர் டிராக்டர், ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடி செய்து, சலுகை விலையாக 7 லட்சத்து ஆயிரம் ரூபாய் வீதம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கான தொடக்க விழா, டிராக்டர் டீலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் ராஜராஜ சோழன் வரவேற்றார்.
விவசாயிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தள்ளுபடியில் சலுகை விலையில் வழங்கப்படும் டிராக்டர்களுக்கான சாவியை, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஐசர் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆஷிஷ் குப்தா வழங்கி பேசினார்.
விழாவில் ஐசர் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் சோம சேகர், பொது மேலாளர் ஆச ராமு, ஏரியா மேலாளர் வெங்கடேஷ், வாலாஜா நகரம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பண்ணை ராஜா, மற்றும் விவசாயிகள் பலரும் பங்கேற்றனர்.