
அரியலூரில் இந்திய மருத்துவ சங்க கிளை சார்பில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே, இந்திய மருத்துவ சங்கத்தின் அரியலூர் கிளை சார்பில், கொரோனா மூன்றாம் அலை தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உடையார்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், இந்திய மருத்துவ சங்கத்தின் அரியலூர் கிளை தலைவர் எழில் நிலவன் வரவேற்று பேசினார். கொரோனா மூன்றாம் அலை தொடர்பாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள் குறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் அரியலூர் கிளை செயலாளர் என். நாகராஜன் சிறப்புரையாற்றினார். இவ்விழிப்புணர்வு முகாமில், ஓய்வு பெற்ற அரசு மருத்துவ அலுவலர் சிவகுமார், பல் மருத்துவர் ஸ்ரீ ராம்ராஜ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.