அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ ஐ பி யு சி சார்பில் மறியல் போராட்டம் நடத்திய, 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு, சேம நலநிதி பங்களிப்பு, ஓய்வூதியத் தொகை வட்டியுடன் கூடிய இருப்பு கணக்கு வழங்கிவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டபடி, தினக்கூலி சம்பளத்தை அமுலாக்கி, உரிய அரியர்ஸ் பணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை கூலி அடிப்படையில், கிராம தூய்மை காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். 2022 -மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் நடத்தப்படும் என, ஏ ஐ டி யு சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஏ ஐ டி யு சி அரியலூர் மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் வால்பாறை மாணிக்கம், ராமநாதன், ஆறுமுகம், சிவஞானம், தனசிங், நல்லுசாமி, ஜீவா, கனகராஜ், ராயதுரை, ராஜா, வனிதா, சித்ரா, பிச்சைபிள்ளை, மருதமுத்து, கோமல் ராஜ் உள்பட 77 பேரை, அரியலூர் போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்துறை சபரிநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பார்த்திபன், மாறன் உள்ளிட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.